அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Monday, February 18, 2013

இருதய சிகிச்சை உதவி : அதிரை நியூஸின் தன்னிலை விளக்கம் !

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புச்சகோதரர்களே,

கடந்த சில நாட்களுக்கு முன்பு  "இருதய சிகிச்சை : அதிரைச்சிறுமிக்கு உதவிடுவீர்" என்ற தலைப்பில் நமதூர் வலைதளங்களில் மூலம் உதவி கோரப்பட்டது.

பதிவு தொடர்பாக தன்னிலை விளக்கம் :
அதிரை நகரைச் சார்ந்தவர் சகோ. S.A. அப்துல் மஜீத் இவர் அந்தப்பகுதியில் இருக்கும் பிஸ்மி காம்ப்ளக்ஸில் பராமரிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் A. அப்துல் முனாப் அவர்களைத் தொடர்பு கொண்டு தனது மகன் வழி பேத்தி ஆஃப்ரின் கடந்த ஒரு வருடமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக உதவி எதிர்பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்கள் சகோ. சேக்கனா நிஜாம் அவர்களை தொடர்புகொண்டு குழந்தையின் நிலை குறித்தும் இதற்கு இணையத்தின் மூலமாக உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அடுத்த நாள் சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்களை, சகோ. ஜமால் [ அஜ்மீர் ஸ்டோர் ] மற்றும் பிஸ்மி காம்ப்ளக்ஸின் உரிமையாளர் சகோ. பிஸ்மில்லாக்கான் ஆகியோர் முன்னிலையில் சந்தித்து, குழந்தையின் சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் அனைத்தையும் கேட்டறிந்தததோடு மட்டுமல்லாமல் அரசு நிதி உதவி பெறுவதற்குரிய வழிமுறைகளையும் அவரிடம் எடுத்துச்சொல்லிய பிறகுதான் காணொளிப் பதிவிற்குரிய முயற்சியில் ஈடுபடுகின்றனர். மேலும் புதுத்தெருவில் இருக்கும் குழந்தையின் இருப்பிடத்திற்கு நேரடியாகச் சென்று புகைப்படமும் எடுக்கின்றனர்.
இருதய சிகிச்சைக்குரிய உதவிகளை சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்களுக்கு நேரடியாக செல்லும் வகையில் அவரின் தொடர்பு எண்ணும், வங்கி விவரமும் பதிவில் குறிப்பிட்டு நமது அதிரை சகோதரர்களின் அனைத்து வலைத்தளங்களுக்கு அனுப்பி அவற்றை பதிவு செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் குவைத்தில் வசிக்கும் குழந்தையின் தாய் மாமன் சகோ. இக்பால் அவர்கள் குழந்தையின் சிகிச்சைக்குரிய முழு செலவீனங்களையும் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக முன்வந்துள்ளாதாகவும், இந்தப்பதிவை உடனடியாக நீக்க அவர் கேட்டுக்கொள்கிறார் என்ற தகவல் சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்கள் மூலம் எங்களுக்கு கிடைத்ததால், அடுத்தநாள் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களின் அலுவலகத்தில் அனைவரும் ஒன்று கூடுகின்றோம்.
அப்போது  தனது வங்கி கணக்கில் இரு சகோதரர்களிடமிருந்து தலா ரூபாய் 10,000/- மற்றும் 5,000/- என மொத்தம் ரூபாய் 15,000/- வரவு வைக்கப்பட்டுள்ள [ 15-02-2013 அன்று வரை ] வங்கிபுத்தகத்தை எங்களிடம் காட்டுகிறார். அதோடு அதிரையில் வசிக்கும் இரண்டு நபர்கள் மூலம் தலா ரூபாய் 3000/- வீதமும், மற்றொரு நபர் மூலம் ரூபாய் 1500/- ம் ஆகக்கூடுதல் ரூபாய் 22500/- இருப்பதாக எங்களிடம் கூறுகிறார்.
வலைத்தளங்களில் இதுகுறித்து செய்தியை பதிந்து விட்டு அவற்றை நீக்குவது என்பது அல்லாஹ்காக தங்களின் நேரத்தையும், உழைப்பையும் செலுத்தி நற்காரியங்களில் ஈடுபடும் சகோதரர்களுக்கு, அவற்றை பதியும் வலைதளங்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் அவரிடம் எடுத்துக்கூறப்பட்டன. அதோடு மட்டுமல்லாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் நமதூரைச்சார்ந்த பிற சகோதரர்கள் இதுபோன்ற மருத்துவ உதவி கோரி செய்தி வெளியிட கேட்டுக்கொண்டு அவற்றை தளங்களில் மறுமுறை பதியும் போது ஏற்படுகிற சிரமங்கள் குறித்தும் அவரிடம் எடுத்துச்சொல்லப்பட்டது.
நிதி உதவி கோருதல் தொடர்பாக சமூக நலனில் அக்கறையுள்ள சில சகோதரர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அவற்றை முறையாக விசாரித்து செயல்படுத்தினாலும், இந்நிகழ்வின் மூலம் எற்பட்ட எதிர்பாரத சூழ்நிலைகள் போல் எந்தவொரு அமைப்பின் மூலம் இவற்றை நன்நோக்கில் செயல்படுத்திருந்தாலும் இதுபோன்ற சங்கடங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதை நாம் மறுக்க இயலாது. அல்லாஹ்காக தங்களின் நேரத்தையும், உழைப்பையும், பொருளையும் செலுத்தி நற்காரியங்களில் ஈடுபடும் சகோதரர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தி விடும் என்பதையும் மறுக்க இயலாது.
இறுதியாக இதன் சூழ்நிலையை விளக்கி உங்கள் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்களிடம் கோரப்பட்டுள்ளது. இறைவன் நாடினால் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
அன்றைய தினம் குழந்தையின் நிலை மிக மோசமானதை அடுத்து அவசர சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல குடும்பத்தினர் ஆயத்தமாகி இருந்தனர். அப்போது குழந்தையை வழியனுப்பி வைப்பதற்காக சகோ. S.A. அப்துல் மஜீத்,  சகோ. பிஸ்மில்லாக்கான் ஆகியோருடன் சகோ சேக்கனா நிஜாம் அவர்கள் புதுத்தெரு இல்லத்திற்கு நேரடியாகச் சென்று குழந்தையை பார்வையிட்டு, குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு குழந்தை பூரண குணமடைய இறைவனிடத்தில் துஆவும் செய்தார்.
குழந்தை விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது ஆனால் இறைவனின் நாட்டம் மாற்றமாக அமைந்து விட்டது. ஆம் குழந்தை சென்னையை அடைந்து சிகிச்சை மேற்கொள்ளும் முன்பே இறந்து விட்டது [ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ]

குழந்தையின் மறுமை வாழ்வை அல்லாஹ் பிரகாசமாக்கி வைப்பானாக !

மீள் பதிவு  
நன்றி :அதிரை நியூஸ் குழு

No comments:

Post a Comment