மேலத்தெரு மகிழங்கோட்டை சாலையில் அமைந்துள்ள [ சண்முகம் டீ கடை அருகில் ]
மின்கம்பம் அடிப்பகுதி மிகவும் அரிக்கப்பட்டு கீழே விழுந்து சாயும்
நிலையில் உள்ளது. இந்த கம்பத்தில் 10க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளது.
அதே போல் நெசவுத்தெரு மாதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் அருகே
அமைந்துள்ள [ டெய்லர் கடை எதிரில் ] மின்கம்பம் அடிப்பகுதி மிகவும்
அரிக்கப்பட்டு கீழே விழுந்து சாயும் நிலையில் உள்ளது. இந்த கம்பத்தில் 20க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உயிரிழப்பு நிகழும் முன்
பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் அதிரையில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள பல மின்கம்பங்கள் மிகவும்
பழுதடைந்துள்ளது எப்போது யார் தலையில் விழும் என்ற நிலையில் உள்ளது.
விபரீதம் நடக்கும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற மின்வாரியம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment