எல்லாப்புகழும் வல்ல இறைவன் அல்லாஹ்விற்கே !
புற்றுநோய் சிகிச்சைக்காக உதவி நாடி! என்ற தலைப்பில் சில தினங்களுக்கு
முன்பு நமதூர் வலைத்தளம் மூலம் பதிவு செய்திருந்தோம். அல்லாஹ்வின் கிருபையை
கொண்டு பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக உதவி பெறும் எண்ணத்தில் அமீரகத்தில் [
துபாய் ] உள்ளவர்களிடம் அலைபேசி மூலமும், நேரடியாகவும் அணுகினோம்.
மாஷா-அல்லாஹ் நிறைய நல்உள்ளம் படைத்த சகோதர்கள் அல்லாஹ்வின் பொருத்தம்
வேண்டி பொருளாதார உதவி புரிந்தனர், எங்கள் பதிவை கேட்டுக்கொண்டதற்கு இணங்க
பதிவிட்ட நமதூர் வலைதள நிர்வாகிகள் மற்றும் பதிவைப் பார்த்த சில
சகோதரர்கள் நேரடியாகவும், எங்களிடமும் தொடர்புகொண்டு பொருளாதார உதவி
புரிந்தனர் இவர்கள் அனைவர்க்கும் எங்கள் சலாத்தினையும் நன்றியையும்
தெரிவித்துகொள்கிறோம்.
அல்லாஹ் நம் அனைவர்க்கும் இம்மையுளும், மறுமையுளும் நற்கூலி வழங்குவானாக ஆமீன்.
கீழ்க்கண்ட தொகை சம்பந்தபட்ட நாகூர் சகோதரருக்கு நேரடியாக அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி தரப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வல்ல இறைவன் அல்லாஹ்விடம் பாதிக்கப்பட்ட சிறுவன் நலம்பெற துஆ செய்வோம்மாக...
S.நூருல்அமீன்
அலைபேசி எண்: +971 0504239080
துபாய்
துபாய்
No comments:
Post a Comment