அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Saturday, February 16, 2013

தமிழக தவ்ஹீத் ஜமாத் சார்பாக அதிரையில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

இன்று [ 15.02.2013 ] மாலை 6.30 மணியளவில் அதிரை தக்வா பள்ளி அருகில் தமிழக தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'நபிவழி மறந்தோரே நரகத்தை அஞ்சிடுவீர்' என்ற தலைப்பிலும், மாநில பேச்சாளர் மௌலவி யாசிர் அராஃபாத் இம்தாதி அவர்கள் 'இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு' என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.



பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர் ஆன் ஹதிஷை மட்டும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2. அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்த்லிருந்து கடைத்தெரு வழியாக மகிழங்கோட்டை செல்லும் சாலையை புதிய தார்சாலையாக போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி சம்மந்தப்பட்ட துறை மற்றும் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்..

3. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு இருக்கின்ற தனி இடஓதுக்கீட்டீனை உயர்த்தி தருவோம் என்று திருச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4. முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று விஷ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மனஉறுதியை பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

5. விஷ்வரூபம் திரைபடத்திற்கு ஆதரவாக பேசிய அதிரை சேர்மன் அஸ்லத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

6. அப்சல் குருவை தூக்கிலிட்டு நீதியை சாகடித்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்

7. கடந்த சில மாதமாக அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை நாளாக இருந்த வெள்ளிகிழமையை ஞாயிற்று கிழமையாக நிரந்தரமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகத்தை கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியபடுத்திக்கொள்கிறோம். இது மீண்டும் தொடர்ந்தால் அதிரையில் பொதுமக்களை திரட்டி காதிர் முகைதீன் பள்ளி முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment