அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Monday, February 4, 2013

அதிரை பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு ரூ 38 லட்சம் ஒதுக்கீடு !


அதிரை மற்றும் அதிரையைச் சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகிய புதிய பேருந்து நிலையம் அமைத்திட வலியுறுத்தி நமதூரைச் சார்ந்த சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இது தொடர்பான கோரிக்கையை சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு நமதூருக்கு வருகை புரிந்த மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களிடம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இன்னபிற முக்கிய கோரிக்கையுடன் நமது நேர்காணலில் அதிரை பொதுமக்களின் விருப்பத்தை அவரிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் அவர்களும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகக் கூறிச்சென்றார்.

[ அவருடன் கூடிய நேர்காணலை பார்க்க... இங்கே கிளிக் செய்க ]

வருகிற நிதியாண்டில் தனது தொகுதிக்கு கிடைக்கக்கூடிய மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் அதிரையில் அமைப்பதற்காக ரூபாய் 38 இலட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக நேற்று [ 03-02-2013 ] அதிரை பேருந்து நிலையம் அருகே நகர தி.மு.கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களுக்கு பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment