அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Tuesday, February 26, 2013

சென்னையில் மாபெரும் இஜ்திமா மாநாடு [ புகைப்படங்கள் ] !


சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் பகுதியில் உள்ளது அலமாதி எனும் கிராமம். இங்கு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இஸ்லாமிய இஜ்திமா மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்காக பிரம்மாண்டமான முறையில் பல விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.








சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட ராட்சத பந்தல்கள் போடப்பட்டு அதில் சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் மற்றும்  ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. மைதானத்தின் உள்ளே உளு செய்வதற்காக கிரேன் மூலம் பள்ளங்கள் வெட்டப்பட்டு 4 இடங்களில் மிக நீளமான அஹல்கள் அமைக்கப்பட்டிருந்தன. உளு செய்வதற்காக மிக நீளமான பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய தண்ணீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சிறுநீர் கழிப்பதற்கு வசதியாகவும், மலம் கழிப்பதற்கு வசதியாகவும் தனித்தனியே பிளாஸ்டிக்கிலான ரெடிமேடு பாத்ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

10 க்கும் மேற்பட்ட உணவகங்கள் அமைக்கப்பட்டு அதில் ஊர்வாரியாக  பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது .உணவு டோகண் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக உணவை வாங்கிச்சென்று ,சாப்பிடுவதர்காக அமைகப்படிருந்த  விஷேச பந்தலில் அமர்ந்து உணவருந்தினார்கள்.

இது தவிர பல சிற்றுண்டிக் கடைகளும் நீண்ட வரிசையில் அமைக்கப்படிருந்தன. இதற்காக தமிழக அரசின் சார்பில் 500 க்கும் மேற்பட்ட அரசு  பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன  ,பேருந்துகள் அனைத்தும் மைதானத்தின் உள்ளே அணிவகுத்து  நின்றன . .ஒவ்வொரு பிரிவிற்கும் பொருப்புதாரிகள்  நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன .இந்த இஜ்திமா மாநாட்டில்  சிறப்பு பயான் செய்வதற்காக டெல்லி பேஷ் இமாம் ,மற்றும் ஹைதராபாத் ,பெங்களுரு  ,போன்ற பகுதிகளிலிருந்து இமாம்கள் ,மௌலவிகள் ,உலமாக்கள் ,ஆலிம்கள்  வந்திருந்தனர்.

மாநாட்டு திடலை மத்திய உளவுத்துறையின் ஹெலிகாப்டர் வட்டமிட்ட வண்ணம்  இருந்தது. ஒரு சிறிய விளம்பரம் கூட இல்லாமல் அதுவும் சென்னை, காஞ்சிபுரம்  ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டுமே கலந்துகொண்ட  இந்த இஜ்திமா மாநாட்டில் எப்படி இத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டதை பார்த்த  அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துபோனார்கள். குறிப்பாக தமிழக மற்றும் அகில இந்திய அரசியல் வாதிகளின் புருவத்தை உயர்த்தசெய்துள்ளது.

அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...

நேரடி களத்தொகுப்பு : ஜே. ஷேக்பரீத் 
நன்றி : முத்துபேட்டை எக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment