அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Saturday, February 16, 2013

அதிரையில் உப்பு உற்பத்தி பாதிப்பு !

வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தென் தமிழகம் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் அதிரையில் திடீரென ஒரு மணி நேரம் உப்பள பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அதிரை, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. டிசம்பரில் இருந்து உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணிகள் துவங்கி நடந்து வந்தது. கடந்த 13ம் தேதி பொன் உப்பு வாருதல் துவங்கியது.

தொடர்ந்து 5 நாட்கள் வெயில் அடித்தால் மீண்டும் உப்பு உற்பத்தி துவங்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment