அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Tuesday, February 26, 2013

பொறுத்திருந்து பாப்போமே ! என்னதான் ஆவுதுன்னு !?


ரயில்வே பட்ஜெட் – ஓர் அலசல் !
நாட்டை ஒருங்கிணைப்பதில் ரயில்வேயின் பணி மகத்தானது. நாட்டின் வளர்ச்சியில் ரயில்வே முக்கிய பங்காற்றுகிறது  என்ற உரையுடன் இன்று மக்களவையில் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில்…
1. ரயில்வே தொடர்பாக புகார் தெரிவிக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், ரயில்வே பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொள்ளவும் இலவச எண் 1800111321 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் மூலம் 24 மணிநேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் வசதி ஏற்படுத்தப்படுவது. இணையம் மூலம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட்டுகள் பதிவு செய்யும் வகையில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்டவை. 

3. இந்திய ரயில்வேயில் புதிதாக 1.45 லட்சம் பேர் வேலைக்கு சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது நிச்சயமாக பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள், எஸ்க்லேட்டர்கள் ஏற்படுத்துவது.

5. ரயில்களில் வழங்கப்படும் உணவு சோதனைகூடங்களில் பரிசோதனை செய்து, ரயில்வே நிலைய சமையலறைகள் ஐ.எஸ்.ஓ., தரத்திற்கு உயர்த்தப்படுவது.

6. ரயில் குடிநீர் விஜயவாடா, நாக்பூர், பிலாஸ்பூர், அகமதாபாத்தில் ஆகிய இடங்களில் ஏற்படுத்த இருப்பது. நடப்பு ஆண்டில் 1040 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தூய்மையை பராமரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும்.

8. பெரிய ரயில் நிலையங்களில் ஊனமுற்றோருக்கு புதிய வசதிகள் ஏற்படுத்த இருப்பது.

உள்ளிட்ட புதிய திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்று கருதினாலும்...

ரயில் கட்டணம் உயராது என அறிவித்துவிட்டு ரயில்வே முன்பதிவு கட்டணம், தட்கல், சூப்பர் பாஸ்ட் ரயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்படும் என்றும் மேலும் சேவை கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பதும், சரக்கு கட்டணம் 5 சதவீதம் உயர்த்த இருப்பதும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் என்பதை மறுக்க இயலாது. 

தஞ்சை மாவட்டத்தினருக்கு சற்று மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது கீழ் கண்ட புதிய அறிவிப்புகள்...
1. தஞ்சை - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை 

2. கோவையிலிருந்து திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்

3. சென்னை - தஞ்சை இடையே தினசரி ரயில்

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் !?
கடந்த 30-12-2006 முதல் காரைக்குடி - திருவாரூர் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த 'கம்பன் எக்ஸ்பிரஸ்' ரயிலை நிறுத்தியதையடுத்து திருவாரூர் - காரைக்குடி அகல இரயில் பாதைப் பணிகளை விரைவாக முடித்துதர வேண்டும் என்பது அதிரை, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தாலும் சமிபகாலமாக சில மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக கடந்த  [ 19-10-2012 ] அன்று முதல் மீட்டர்கேஜ் பாதையில் சென்று வந்த ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை பெயர்த்து எடுக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டும் வந்தது இந்தப்பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
இதன்பிறகு அகல ரயில் பாதைக்கான எந்தவொரு பணிகளும் இந்தப் பகுதிகளில் நடைபெறுவதற்குரிய அறிகுறியும் தென்படவில்லை என்பது பொதுமக்களுக்கு சற்று கவலையில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்தும், இதற்கு பின்பு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுதப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், இந்தப் பணிகளை துரிதமாக செயல்படுத்தக் கோரியும் வருகின்ற [ 08-03-2013 ] அன்று வேலூர் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மான் MP அவர்களின் தலைமையில், முஸ்லீம் லீக் - முத்துப்பேட்டை கிளையின் முக்கிய நிர்வாகிகளோடு பாராளுமன்றம் சென்று இந்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அவர்களை சந்திக்க உள்ளனர்.

பொறுத்திருந்து பாப்போமே ! என்னதான் ஆவுதுன்னு !?

சேக்கனா M. நிஜாம்

No comments:

Post a Comment