அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Thursday, February 21, 2013

அடிக்கடி டிரான்ஸ்பார்மர் பழுதால் அதிரை மக்கள் அவதி !

அதிரை முத்தம்மாள் தெரு, MSM நகர், ஷப்னம் லேன், KSA லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் ஆகிய பகுதிகளோடு காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரைஸ் மில் மற்றும் சேது பெருவழிச்சாலையில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு, முத்தம்மாள் தெரு எதிரே இருக்கின்ற டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த டிரான்ஸ்பார்மரில் கூடுதல் இணைப்பின் காரணமாக அடிக்கடி பழுதடைந்தது விடுகிறது. மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் எற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தப் பிரச்சனையை 'மனித உரிமைக்காவலர்' KMA ஜமால் முஹம்மது அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற உடனே சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர்களை வரவழைத்து பழுதை சரி செய்வதற்குரிய முயற்சியில் ஈடுபட்டார்.
நிரந்தர நடவடிக்கையாக இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள கூடுதல் இணைப்புகளை பிரித்து புதிதாக மற்றுமொரு டிரான்ஸ்பார்மர் அதே பகுதியில் பொறுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
மீண்டும் பல மணி நேர மின்வெட்டால் அதிரை மக்கள் அவதி :
அதிரையில் நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மீண்டும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, இரவு 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை மின் துண்டிப்பு அமலில் உள்ளது. இதனால் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளதையொட்டி மாணவர்கள் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் விநியோகத்திலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment