அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Wednesday, May 15, 2013

தீ அதிரை நியூஸ் தளத்திற்கு பதிவாளர்கள் தேவை

தீ அதிரை நியூஸ் தளத்திற்கு பதிவாளர்கள் தேவை 

அமங்க நான் மட்டும் இந்த சைட் ட மாரடிக்க முடியலங்க அதுனாலத்தான் புதுசா பதிவாளர தேடி தெரு தெரு வா அலையுறேன் 

தகுதி ; நல்ல ஜால்ரா அடிக்க தெரியனும் அப்பரும் முக்கியமா போட்ட செய்திக்கு கமெண்ட்ஸ் அதிகமா போடா தெரியனும்  ஒரு நாளைக்கு 10 மேல கமெண்ட்ஸ் போடணும் 

அதாங்க ஜால்ரா தட்டனும் jing jak

இதுக்கு தகுதி இருக்குறவங்க காத்தமுத்து யுனிவேர்சிட்டி ecr கார்டன் அணுகவும் 


அதிராம்பட்டினம் பக்கத்துக்கு ஊரு  

Monday, May 13, 2013

புகழ்ச்சி ராஜாவும் .......ஜால்ரா தளபதிகளும் ......வாவ்

இப்போ நம்ம நாட்ல ராஜா ராணி ஆட்சி இல்ல ..ஆனா இப்போ காசு நாய் பேய் டேலாம் காசு இருக்கறதுனால அவன் அவன் ராஜா தான் .ஆணா இதுல ஜால்ரா தளபதிகளும் இருப்பாங்க குனிஜா வாழ்க நிமிந்தா நன்றி என்று சொல்லி கொண்டு பரவாஇல்லை அது போக்கட்டும் நம்ம ஊருல பிளாக்கர் கம்பெனி வட்சு இருக்காங்களாமே அத்ங்கே வெப்சைட் டூ புதுசு புதுசா துரங்குராங்கலாம் அதுல செய்திய பாகமலேயே பதிவுக்கு செய்தி அறிந்தமைக்கு தகவலுக்கு நன்றி லாம் போடுறாங்களாம் மத்தவங்க பாக்கும் பொது ஒரே ஜால்ரா வா ஓடுதாம் மரண அறிவிப்புக்கு குட வாழ்த்துக்கள் போடுறாங்களாம் அதுமட்டும் இல்லாமே ஒருவருக்கா தந்தி அனுப்பி என்ற செய்திய பாருங்க பாருங்க ண்டு  கெஞ்சி கதரருராரம் பாவம் யாரு பெத்த புல்லை யோ சரிங்க நம்மளும் அந்த செய்திய பாப்போம் யன்னபன்றது எல்லாம் தல விதி 

இங்கு பதியப்படும் பதிவு சிரிபதற்கு மட்டுமே 

Saturday, March 2, 2013

பதிவாளரும் ஜால்ராகளும் ஒரு சந்திப்பு

நம்ம ஊர்ல ஒர்வர்தருக்கும் வீடு இருக்குதோ இல்லையே அவன் அவனுக்கு கைல ஒரு ப்ளாக் (blogger )இருக்கும்.என்னமோ தினத்தந்தி தினகரன் மாரி பீதிகிறது.செய்திகள பதியுறது அதிகு பின்னாலேயே கமெண்ட்ஸ் சா போடுறது.இல்லாட்டி கூட ஒரு நாளுஅஞ்சு பிசுகள வச்சுகிறது.மாறி மாறி கமெண்ட்ஸ் சா போடுவானுங்க ஆஹா அருமை யாருமைண்டு செய்திய பார்த்த ஒன்னுமே இருக்காது.பல வருசமா நம்ம ஊருல பிளாக்கர் பைத்தியம் முத்தி போய் கிடக்குது.நா ஏதும் தாப்ப சொல்லலேங்க இருக்குறத சொல்றேன்.எதோ இதுல 10 கோடி மேல காசு வரமாதிரி தான் சீனா இருக்கும்.ஒரு சில சைட் இருக்கு அத ஏவனும் பாகமாட்டன்.இருகுரவேனே பாத்தாதான் உண்டு.இல்லடி நல்ல போய்கிட்டு இருக்குன் சைட் அத உட்டுபுட்டு புதுசா ஆரபிசிகிட்டு அது ஒரு நாலு ஆஞ்சு பெற கோஷ்டி செய்துகிட்டு செய்திய போட்டவுடனேய அருமையான செய்தி அந்த செய்தி இந்த சேய்திண்டு வாழ்தி தள்ளுறது என்னமோ போங்க

  1. எதாவது குறையுடன் அடுத்த சந்திப்பு  தொடரும்

அதிரை BVC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !அதிரை பீச் கைபந்து கழகம் [ BVC ]  சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நமதூர் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மைதானத்தில் இன்று [ 01-03-2013 ]  இரவு 7.00 மணியளவில் சிறப்பாக துவங்க இருக்கின்றது. இன்றைய போட்டியில் பல்வேறு ஊர்களிலிருந்து வர இருக்கின்ற ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருகின்றனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்குகொள்ள இருக்கின்ற இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் அதிரை பீச் கைபந்து கழகம் [ BVC ]  சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லிப்பட்டினத்தில் வலையில் சிக்கியது ஓரக்கத்தாளை !


மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் ஓரக்கத்தாளை எனும் அதிசய மீன்கள் சிக்கியது. மொத்தம் 202 மீன்கள் சிக்கி இருந்தது.

ஒரு மீன் 20 முதல் 30 கிலோ வரை எடைகொண்டதாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இவ்வகை மீன்கள் வியாபாரிகளிடம் மொத்தமாக ரூ.60 லட்சத் திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மல்லிப்பட்டினம் முகம்மது யூசுப் கூறுகையில்,
'இவ்வகை மீன்களில் உள்ள மெட்டி என்ற உறுப்பு மருத்துவ குணம் உடையது. இவ்வகை மீன்கள் 30 ஆண்டுகளுக்கு முன் இத்துறைமுகத்தில் 7 சிக்கியது. தற்போது 202 மீன்கள் சிக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் 20 முதல் 30 கிலோ வரை எடை உள்ளது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் வதற்காக வியாபாரிகள் ரூ.60 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்' என்றார்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய ஓரக்கத்தாளை மீன்களை ரூ.60 லட்சத்துக்கு வாங்கிய வியாபாரிகள் அதை லோடு ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர்.

அதிரை நியூஸ்க்காக செல்வகுமார்

Friday, March 1, 2013

வாகன விபத்தில் அதிரை வாலிபன் பலத்த காயம் !


அதிரை கீழத்தெரு – புதுக்குடி நெசவுத்தெருவைச் சார்ந்தவர் ஜெஹபர் அலி. இவர் டீக்கடை யூனுஸ் [ கடைத்தெரு ] அவர்களின் மருமகனார் ஆவார்.

இன்று [ 28-02-2013 ] மாலை 5.45 மணியளவில் பிலால் நகர் அருகே சேதுபெருவழிச்சாலையில் [ ECR  ] இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஏ.எல்.மெட்ரிக். பள்ளி : ஆண்டு விளையாட்டு விழா !


ஏ.எல்.மெட்ரிக். பள்ளி : ஆண்டு விளையாட்டு விழா !
அதிரை ஏ.எல்.மெட்ரிக். பள்ளியில் இன்று [  28-02-2013 ] காலை மணியளவில் நடைபெற்ற ஆண்டுவிளையாட்டு விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர்கள் என பெரும்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.