அதிரை கீழத்தெரு – புதுக்குடி நெசவுத்தெருவைச் சார்ந்தவர் ஜெஹபர் அலி. இவர் டீக்கடை யூனுஸ் [ கடைத்தெரு ] அவர்களின் மருமகனார் ஆவார்.
இன்று [ 28-02-2013 ] மாலை 5.45 மணியளவில் பிலால் நகர் அருகே சேதுபெருவழிச்சாலையில் [ ECR ] இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment