அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Saturday, March 2, 2013

மல்லிப்பட்டினத்தில் வலையில் சிக்கியது ஓரக்கத்தாளை !


மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் ஓரக்கத்தாளை எனும் அதிசய மீன்கள் சிக்கியது. மொத்தம் 202 மீன்கள் சிக்கி இருந்தது.

ஒரு மீன் 20 முதல் 30 கிலோ வரை எடைகொண்டதாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இவ்வகை மீன்கள் வியாபாரிகளிடம் மொத்தமாக ரூ.60 லட்சத் திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மல்லிப்பட்டினம் முகம்மது யூசுப் கூறுகையில்,
'இவ்வகை மீன்களில் உள்ள மெட்டி என்ற உறுப்பு மருத்துவ குணம் உடையது. இவ்வகை மீன்கள் 30 ஆண்டுகளுக்கு முன் இத்துறைமுகத்தில் 7 சிக்கியது. தற்போது 202 மீன்கள் சிக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் 20 முதல் 30 கிலோ வரை எடை உள்ளது. இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் வதற்காக வியாபாரிகள் ரூ.60 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்' என்றார்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய ஓரக்கத்தாளை மீன்களை ரூ.60 லட்சத்துக்கு வாங்கிய வியாபாரிகள் அதை லோடு ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர்.

அதிரை நியூஸ்க்காக செல்வகுமார்

No comments:

Post a Comment