அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Tuesday, February 19, 2013

அதிரையில் பயங்கரம் (புதுசாக வந்து இருக்கும் வாசகர்கள் கவனத்திற்கு)

நம்மூரில் எப்போதும் ஒரு மவுசு ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு உண்டு. லைப் ஸ்டைல் இமேஜ் எப்போதும் இருப்பதால் தொடர்ந்து அதை வாங்குகின்றனர் குடும்பத்தினரோடு செல்பவர்களோ, ஷாப்பிங் செல்லவோ இந்த பைக்கை வாங்குவோர் ரொம்ப கம்மிதான். வித்தியாசமான ரசனையுள்ளோரே இந்த பைக்கை விரும்புவார்கள். 
புதிய மாடலாக வந்துள்ள புல்லட்டில் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பிரமாண்டமாக இருக்கிறது. சின்ன புரொஜெக்டர் லைட்டுடன் புதிய ஹெட்லைட் முன்பக்கத்தை அழகாக்கிறது. இரட்டை குடுவை டயல்கள். ஒன்று டிஜிட்டல், மற்றொன்று அனலாக். டயல்களுக்கு நடுவே கார்களில் இருப்பது போன்று வார்னிங் லைட் சுவிட்ச் உள்ளது. இந்த ஸ்விட்சை தட்டினால் காரில் உள்ளதுபோல் ஒரே நேரத்தில் நான்கு இன்டிகேட்டர் லைட்டுகளும் அணைந்து, அணைந்து எரியும். 
உயரமானவர்கள் மட்டுமின்றி உயரம் குறைவானவர்களும் ஓட்டும் வகையில் புதிய தண்டர்பேர்டு இருக்கை உயரமும் குறைக்கப்பட்டுள்ளது. எடை 195 கிலோ. சிசி 499. இன்ஜன் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிலேட்டரை முறுக்கினாலே வேகம் பிய்த்து கொண்டு போகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்துக்கு செல்லலாம். இரண்டு வீல்களிலும டிஸ்க் பிரேக் உள்ளது. வீல் பேஸ் 20 மி.மீ. பழைய பைக்கிலிருந்து குறைக்கப்பட்டு இருப்பதால் வளைவுகளில் எளிதாக ஓட்ட முடியும். லிடடருக்கு 30 கி.மீ. மைலேஜ் தரும் என்கிறார்கள் என்பீல்டு பிரியர்கள். இதன் விலை ரூ. 1.40 லட்சத்தை தொடும்.

புதுசாக வந்து இருக்கும் வாசகர்கள் கவனத்திற்கு

ஏன் இந்த தலைப்பு  என்று பலருக்கும் கேள்வி வரும் என்ன பண்றதுங்க ஊர்ல ஒரு நல்ல செய்தியும் கடைக்க மாதிங்கிது அதுனால தான் இவர வச்சு ஒரு போட்டுவ எடுத்து ஒரு பெரிய செய்தியா போடுறோம். அதிராம் பட்டினத்துல  ரேபோர்டேர்ஸ்  ஒரு பயபுள்ள கூட கிடைக்க மாட்டிகிறாங்க உங்கள்ட்ட இருந்த சொல்லுங்க


No comments:

Post a Comment