அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Tuesday, February 26, 2013

பொறுத்திருந்து பாப்போமே ! என்னதான் ஆவுதுன்னு !?


ரயில்வே பட்ஜெட் – ஓர் அலசல் !
நாட்டை ஒருங்கிணைப்பதில் ரயில்வேயின் பணி மகத்தானது. நாட்டின் வளர்ச்சியில் ரயில்வே முக்கிய பங்காற்றுகிறது  என்ற உரையுடன் இன்று மக்களவையில் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில்…
1. ரயில்வே தொடர்பாக புகார் தெரிவிக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், ரயில்வே பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொள்ளவும் இலவச எண் 1800111321 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் மூலம் 24 மணிநேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் வசதி ஏற்படுத்தப்படுவது. இணையம் மூலம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட்டுகள் பதிவு செய்யும் வகையில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்டவை. 

3. இந்திய ரயில்வேயில் புதிதாக 1.45 லட்சம் பேர் வேலைக்கு சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது நிச்சயமாக பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள், எஸ்க்லேட்டர்கள் ஏற்படுத்துவது.

5. ரயில்களில் வழங்கப்படும் உணவு சோதனைகூடங்களில் பரிசோதனை செய்து, ரயில்வே நிலைய சமையலறைகள் ஐ.எஸ்.ஓ., தரத்திற்கு உயர்த்தப்படுவது.

6. ரயில் குடிநீர் விஜயவாடா, நாக்பூர், பிலாஸ்பூர், அகமதாபாத்தில் ஆகிய இடங்களில் ஏற்படுத்த இருப்பது. நடப்பு ஆண்டில் 1040 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தூய்மையை பராமரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும்.

8. பெரிய ரயில் நிலையங்களில் ஊனமுற்றோருக்கு புதிய வசதிகள் ஏற்படுத்த இருப்பது.

உள்ளிட்ட புதிய திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்று கருதினாலும்...

ரயில் கட்டணம் உயராது என அறிவித்துவிட்டு ரயில்வே முன்பதிவு கட்டணம், தட்கல், சூப்பர் பாஸ்ட் ரயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்படும் என்றும் மேலும் சேவை கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பதும், சரக்கு கட்டணம் 5 சதவீதம் உயர்த்த இருப்பதும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் என்பதை மறுக்க இயலாது. 

தஞ்சை மாவட்டத்தினருக்கு சற்று மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது கீழ் கண்ட புதிய அறிவிப்புகள்...
1. தஞ்சை - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை 

2. கோவையிலிருந்து திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்

3. சென்னை - தஞ்சை இடையே தினசரி ரயில்

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் !?
கடந்த 30-12-2006 முதல் காரைக்குடி - திருவாரூர் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த 'கம்பன் எக்ஸ்பிரஸ்' ரயிலை நிறுத்தியதையடுத்து திருவாரூர் - காரைக்குடி அகல இரயில் பாதைப் பணிகளை விரைவாக முடித்துதர வேண்டும் என்பது அதிரை, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தாலும் சமிபகாலமாக சில மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக கடந்த  [ 19-10-2012 ] அன்று முதல் மீட்டர்கேஜ் பாதையில் சென்று வந்த ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை பெயர்த்து எடுக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டும் வந்தது இந்தப்பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
இதன்பிறகு அகல ரயில் பாதைக்கான எந்தவொரு பணிகளும் இந்தப் பகுதிகளில் நடைபெறுவதற்குரிய அறிகுறியும் தென்படவில்லை என்பது பொதுமக்களுக்கு சற்று கவலையில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்தும், இதற்கு பின்பு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுதப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், இந்தப் பணிகளை துரிதமாக செயல்படுத்தக் கோரியும் வருகின்ற [ 08-03-2013 ] அன்று வேலூர் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மான் MP அவர்களின் தலைமையில், முஸ்லீம் லீக் - முத்துப்பேட்டை கிளையின் முக்கிய நிர்வாகிகளோடு பாராளுமன்றம் சென்று இந்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அவர்களை சந்திக்க உள்ளனர்.

பொறுத்திருந்து பாப்போமே ! என்னதான் ஆவுதுன்னு !?

சேக்கனா M. நிஜாம்

சென்னையில் மாபெரும் இஜ்திமா மாநாடு [ புகைப்படங்கள் ] !


சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் பகுதியில் உள்ளது அலமாதி எனும் கிராமம். இங்கு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இஸ்லாமிய இஜ்திமா மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்காக பிரம்மாண்டமான முறையில் பல விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.








சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட ராட்சத பந்தல்கள் போடப்பட்டு அதில் சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் மற்றும்  ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. மைதானத்தின் உள்ளே உளு செய்வதற்காக கிரேன் மூலம் பள்ளங்கள் வெட்டப்பட்டு 4 இடங்களில் மிக நீளமான அஹல்கள் அமைக்கப்பட்டிருந்தன. உளு செய்வதற்காக மிக நீளமான பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய தண்ணீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சிறுநீர் கழிப்பதற்கு வசதியாகவும், மலம் கழிப்பதற்கு வசதியாகவும் தனித்தனியே பிளாஸ்டிக்கிலான ரெடிமேடு பாத்ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

10 க்கும் மேற்பட்ட உணவகங்கள் அமைக்கப்பட்டு அதில் ஊர்வாரியாக  பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது .உணவு டோகண் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக உணவை வாங்கிச்சென்று ,சாப்பிடுவதர்காக அமைகப்படிருந்த  விஷேச பந்தலில் அமர்ந்து உணவருந்தினார்கள்.

இது தவிர பல சிற்றுண்டிக் கடைகளும் நீண்ட வரிசையில் அமைக்கப்படிருந்தன. இதற்காக தமிழக அரசின் சார்பில் 500 க்கும் மேற்பட்ட அரசு  பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன  ,பேருந்துகள் அனைத்தும் மைதானத்தின் உள்ளே அணிவகுத்து  நின்றன . .ஒவ்வொரு பிரிவிற்கும் பொருப்புதாரிகள்  நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன .இந்த இஜ்திமா மாநாட்டில்  சிறப்பு பயான் செய்வதற்காக டெல்லி பேஷ் இமாம் ,மற்றும் ஹைதராபாத் ,பெங்களுரு  ,போன்ற பகுதிகளிலிருந்து இமாம்கள் ,மௌலவிகள் ,உலமாக்கள் ,ஆலிம்கள்  வந்திருந்தனர்.

மாநாட்டு திடலை மத்திய உளவுத்துறையின் ஹெலிகாப்டர் வட்டமிட்ட வண்ணம்  இருந்தது. ஒரு சிறிய விளம்பரம் கூட இல்லாமல் அதுவும் சென்னை, காஞ்சிபுரம்  ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டுமே கலந்துகொண்ட  இந்த இஜ்திமா மாநாட்டில் எப்படி இத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டதை பார்த்த  அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துபோனார்கள். குறிப்பாக தமிழக மற்றும் அகில இந்திய அரசியல் வாதிகளின் புருவத்தை உயர்த்தசெய்துள்ளது.

அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...

நேரடி களத்தொகுப்பு : ஜே. ஷேக்பரீத் 
நன்றி : முத்துபேட்டை எக்ஸ்பிரஸ்

Monday, February 25, 2013

‘அம்மா’ திட்டம் : மக்களைத்தேடி வருவாய்த்துறை...


வருவாய்த்துறை...

தாசில்தார் அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் அலைவதை குறைக்கும் வகையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கே, வருவாய்த் துறையினர் சென்று பணியாற்றும், 'அம்மா' திட்டம் [ AMMA : Assured Maximum Service to Marginal People in All Villages ] தமிழகத்தில் துவக்கப்படுகிறது.

எல்லா வாசகர்களுக்கும் சாரிங்க சும்மா என்னோட வெப்சைட்டையும் develope பண்ணத்தான் இந்த மாறி பண்நேங்க மத்த படிஏதும் இல்லேங்க இனிமே பாருங்க காலைல சுடுற  இட்லி முதல் nite போடுற பொரோட்ட வரைக்கும் சால்னா கூட எல்லாம் updation தாங்க என்ன  நம்புங்க பாஸு 

அதிரையில் ஓர் இனிய உதயம் : மதீனா நெட்வொர்க்ஸ்

இன்று [ 25-02-2013 ] முதல் அதிரையில் புதிய உதயமாக மதினா நெட்வொர்க்ஸ் நிறுவனம் செயல்பட துவங்கியது.



அப்போலோ சிறப்பு மருத்துவர் அதிரைக்கு வருகை !

சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு மருத்துவர் வருகை பற்றிய அறிவிப்பு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக போலியோ விழிப்புணர்வு பேரணி !


இன்று [ 24-02-2013 ] தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட வேண்டும். இவற்றின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதிரை நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர் காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள். 



முன்னதாக பேரணியை துவக்கி வைத்தார் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ஷஃபிரா பேகம், பேராசிரியர் கா. செய்யது அஹமது கபீர், முனைவர் O. சாதிக், பேராசிரியர் மு. பிரேம் நவாஸ் ஆகியோர் சிறப்பாக பேரணியை வழிநடத்தி சென்றனர். இந்த பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் பெறும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காதிர் முகைதீன் கல்லூரியில் புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் !


அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் [ 24-02-2013 ] ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முகாம் இயக்குனர் முனைவர் P. சிலார் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையுரையாற்றினார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் M. சீனி கமால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

இதில் சிறப்பு பேச்சாளர்களாக முனைவர் R. விஜயலெட்சுமி, வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சீதாலெட்சுமி [ ராமசாமி கல்லூரி,  திருச்சி ] மற்றும் முனைவர் E. முபாரக் அலி இணைப்பேராசிரியர் வணிகவியல் துறை, [ ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி ] ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை தொழில் முனைவோராக்க ஆலோசனை வழங்கினர்.

இறுதியில் இக்கல்லூரியின் வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் A. பீர் முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். இம்முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என கலந்து கொண்ட மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.


Thursday, February 21, 2013

அதிரையில் பிஜே சொற்பொழிவு புரோஜெக்டர் மூலம் ஒளிப்பரப்பு !

சென்னை மண்ணடியில் கடந்த 17-2-13 அன்று நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் சகோ. பிஜே அவர்கள் "அப்சல் குருவிற்கு தூக்கு சரியா ?" என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு நமதூர் தக்வா பள்ளி அருகில் நேற்று [ 19-2-13 ] இஷா தொழுகைக்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் திரளாக மக்கள் கலந்து கொன்டனர் !




புகைப்படங்கள் மற்றும் செய்தி : சகோ. அப்துல் ரஹ்மான்

மத்திய அரசை வலியுறுத்தி காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் கோஷம் !

இன்று காலை 10 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்பு JAC, AUT, TNGCTA, MUTA, TANTSAC  ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் பேராசிரியர்கள் மத்திய அரசை வலியுறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல், அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடுதல், பிற்போக்கான உயர்கல்வி மசோதாக்களைக் கைவிடுதல், கல்லூரிகளில் ஆசிரியர் மட்டும் ஆசிரியரில்லாப் பணியிடங்களை நிரப்புதல், மக்களுக்கு எதிரான தாரளமயமாக்கல் கொள்கையைக் கைவிடுதல், சுயநிதிக்/ஒப்பந்த/கெளரவ ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 25,000/- வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

காதிர் முகைதீன் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா !

காதிர் முகைதீன் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட கல்லூரி கலையரங்கின் திறப்பு விழா சிறப்பு துஆ-வுடன் செயலர்.ஹாஜி. K.S. சர்புதீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.  விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவர் A.அப்துல் சுக்கூர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் முதல்வர் முனைவர் A. ஜலால் முனைவர் A.M.உதுமான் முகைதீன் பேராசிரிய பேராசிரியர்கள் அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். இப்புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவின் முடிவில் கல்லூரி முதல்வர் நன்றி கூறினார்.






அமீரகத்தில் நடைபெற்ற TIYA வின் பொதுக்குழுக் கூட்டம் !

அன்புடையீர் :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம்பிக்கை கொண்ட ஆண்களும்பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.அவர்கள் நன்மையை ஏவுவார்கள்தீமையைத தடுப்பார்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள்அவர்கள் ஸகாத்தையும் கொடுபார்கள் அல்லஹ்வுக்கும்அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள் அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான-மிகைத்தவன்ஞானமிக்கவன் (அத்தவ்பா 9:71).
துபை மாநகரில் கடந்த வெள்ளிக்கிழமை 15.02.2013 அன்று இரவு 7 மணியளவில் அமீரக தாஜீல் இஸ்லாம் இனைஞர் சங்க (TIYA) பொதுக்குழுக் கூட்டம் தலைவர் N.முகமது மாலிக் தலைமையிலும் இதர நிர்வாகிகள் முன்னிலையிலும் மிக சிறப்பாக நடைபெற்றது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் TIYAவின் நிர்வாகிகள் மற்றும் ஆலோசானைக்குழு உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து தெரிவு செய்த 9 கீழ்க்காணும் விவாதங்கள் பொதுக்குழு முன் வைக்கப்பட்டது.
1. ஊரில் செயல்பட்டு வரும் TIYAவின் நிர்வாகத்தை புதிதாக மாற்றி அமைப்பது.
2. வருடந்தோறும் செய்து வரும் கல்வி உதவியை இந்த வருடமும் எவ்வாறு தொடர்வது என முடிவு செய்தல்.
3. நமது தெருவில் உள்ள ஏழை சிறுவர்களுக்கு TIYAவின் சார்பாக இந்த கல்வி ஆண்டு விடுமுறையில் ஹத்தனா செய்வது குறித்து.
4. நமது முஹல்லாவில் இயங்கி வரும் உடற்பயிற்சி கூடத்திற்கு மேற்கூறை அமைப்பது குறித்து.
5. நமது முஹல்லாவில் உள்ள எண் 16, 17 வார்டுகளிலுள்ள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்காக இங்குள்ள அரபான் வண்டிகளை வாங்கி வழங்குவது சம்பந்தமாக.
6. அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான காலண்டர் வகைக்கு கொடுக்கப்படவேண்டிய 800 திரஹம் குறித்து.
7. அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளியில் நடைபெற்ற வரும் மக்தப் போன்ற குர் ஆன் பயிற்சி வகுப்புக்களை நமது தெரு சங்கத்திலும் தொடங்குதல்.
8. நமது சங்கத்தில் நடைபெற்று வரும் தையல் வகுப்பு ஆசிரியை சம்பளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடல்.
9. நமது முஹல்லாவில் ஏற்படும் மரணச் செய்திகளை உடனுக்குடன் அமீரகத்தில் உள்ள நமது முஹல்லா வாசிகளுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிப்பதற்கு ஏற்படும் செலவினங்கள்.
என 9 கருத்துக்களும் பொதுக்குழுவில் மேற்காணும் வரிசையில் விவாதிக்கப்பட்டு கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஊரில் செயல்படும் TIYAவை பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்திட தீர்மானிக்கப்பட்டது.
2. நமது முஹல்லாவில் ஏழ்மை நிலையிலுள்ள மாணவமாணவிகளை தாயகத்தில் உள்ள TIYA நிர்வாகிகளின் உதவியுடன் கண்டறிந்து கல்வி உதவித் தொகையை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
3. நமது முஹல்லாவில் ஏழ்மை நிலையிலுள்ள சிறார்களை தாயக TIYAவின் உதவியுடன் கண்டறிந்து TIYAவின் சார்பாக ஹத்தனா செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
4. நமது முஹல்லாவில் இயங்கி வரும் உடற்பயிற்சி கூடத்திற்கு மேற்கூறை அமைத்திட கோரிய வேண்டுகோளை ஏற்று TIYAவின் சார்பாக ரூ.20,000/- வழங்குவதெனவும்அதனை பொறுப்பேற்று செய்திட நாமே இருவரை நியமிப்பதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
5.16 மற்றும் 17ம் வார்டுகளில் சாக்கடைகளை சுத்தம் செய்திட 2 அரபான் வண்டிகளை வாங்கி தலா ஒரு வண்டி என 2 வார்டு மெம்பர்களுக்கும் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.
6. அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக 2013 ஆம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் அதிரையில் அனைத்து முஹல்லாவிலும் விநியோகிப்பட்டது.அதனடிப்படையில் நமது முஹல்லாவில் 300 காலண்டர்கள் சகோதரர் ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் விநியோகித்ததற்கான தொகை AED 800/-அமீரக TIYAவின் சார்பாக வழங்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
7.TIYAவின் பொறுப்பில் நமது சங்கத்திலும் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி மக்தப் போன்று குர்ஆன் பயிற்சி வகுப்புக்களை துவங்கி நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
8. கடந்த 3 வருடங்களாக நமது சங்கத்தில் 200க்கு மேற்பட்ட பெண்கள் தையற்கலை பயின்று பலனடைந்துள்ளனர் எனினும் தற்போது சுமார் 6 பெண்களே பயின்று வருவதால் ஏற்பட்டுள்ள பயிற்சியாளர் சம்பளம்.பற்றாஅக்குறையை அமீரக TIYAவின் சார்பாகி சரி செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
9. நமது முஹல்லாவின் மரணச் செய்திகளை குறுஞ்செய்தி அனுப்பிடும் செலவினங்களை நிர்வாகிகளே ஏற்று வந்துள்ளனர் இனி அதற்கான செலவினத்தை அமீரக TIYA ஏற்றுக்கொள்ளும் என தீர்மானிக்கப்பட்டன.
அன்புடன்.
தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் அமீரக- TIYA 

Thanks : http://adiraitiyawest.blogspot.in/2013/02/tiya.html

அடிக்கடி டிரான்ஸ்பார்மர் பழுதால் அதிரை மக்கள் அவதி !

அதிரை முத்தம்மாள் தெரு, MSM நகர், ஷப்னம் லேன், KSA லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் ஆகிய பகுதிகளோடு காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரைஸ் மில் மற்றும் சேது பெருவழிச்சாலையில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு, முத்தம்மாள் தெரு எதிரே இருக்கின்ற டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த டிரான்ஸ்பார்மரில் கூடுதல் இணைப்பின் காரணமாக அடிக்கடி பழுதடைந்தது விடுகிறது. மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் எற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தப் பிரச்சனையை 'மனித உரிமைக்காவலர்' KMA ஜமால் முஹம்மது அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற உடனே சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர்களை வரவழைத்து பழுதை சரி செய்வதற்குரிய முயற்சியில் ஈடுபட்டார்.
நிரந்தர நடவடிக்கையாக இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள கூடுதல் இணைப்புகளை பிரித்து புதிதாக மற்றுமொரு டிரான்ஸ்பார்மர் அதே பகுதியில் பொறுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
மீண்டும் பல மணி நேர மின்வெட்டால் அதிரை மக்கள் அவதி :
அதிரையில் நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மீண்டும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, இரவு 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை மின் துண்டிப்பு அமலில் உள்ளது. இதனால் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளதையொட்டி மாணவர்கள் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் விநியோகத்திலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

அதிரையில் ரூ 1.05 கோடியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் !

தமிழக அரசின் சார்பாக 2012-13 ஆம் ஆண்டு நிதியாண்டில் பதிவுத்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைகேடுகள் நிகழாமல் கண்காணிக்கவும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பதிவுத்துறை அலுவலகம் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடங்க தமிழக அரசின் சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்று. அதிரை சார்பதிவாளர் அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுமானப் பணிக்காக ரூபாய் ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு, உடன் இவற்றை செயல்படுத்த ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிரை ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சார்ந்த சகோ. ஜஹபர் அலி அவர்களின் சார்பாக ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே அதிரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.